அனிருத்துக்கு பரிசாக கொடுக்கப்பட்ட காரின் விலை இத்தனை கோடியா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Anirudh ravichandran
Anirudh ravichandran

Jailer : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. படத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ் குமார், யோகி பாபு, வசந்த் ரவி, சுனில், தமன்னா என ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் சிறப்பாக இருந்ததால்..

ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் நல்ல வரவேற்ப்பு பெற்று  கூட்டம் கூட்டமாக பார்த்து வருகின்றனர் அதனால் இந்த படத்தின் வசூலும் சக்கபோடு போட்டு வருகிறது இதுவரை மட்டுமே ஜெயிலர் படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அடுத்து அமேசான் OTT தளத்திலும் வருகின்ற 7 ஆம் தேதியில் ரிலீஸ்  ஆக இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தை 200 கோடி பட்ஜெட்டில் எடுத்தது ஆனால் இதுவரை 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதால் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் செம்ம சந்தோஷம் அடைந்தார். அதனை முன்னிட்டு படத்தில் சிறப்பாக நடித்த நடிகர், இயக்குனர் என பலருக்கும் அடுத்தடுத்து பரிசுகளை கொடுத்து வருகிறார்.

முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 சொகுசு காரை பரிசாக கொடுத்தார் அதனை தொடர்ந்து மறுநாளே இயக்குனர் நெல்சனை சந்தித்து porsche காரை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதோட முடிந்து விட்டது என பலரும் நினைத்த நிலையில் கலாநிதி மாறன் அவர்கள் அனிருத்தை சந்தித்து..

சொகுசு கார் ஒன்றை கொடுத்ததோடு மட்டுமில்லாமல் செக் ஒன்றையும் கொடுத்தார் இந்த நிலையில் அதன் விலை எவ்வளவு என்பது குறித்து நமக்கு வெளியாகி உள்ளது அனிருத்துக்கு கொடுத்த  porsche காரின் விலை மட்டுமே 1.40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது அது தவிர ஐந்து கோடி ரூபாய்க்கு செக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.