இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்திருக்கும் கே ஜி எஃப் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து கேஜிஎப் இரண்டாம் பாகம் சமீபத்தில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி 1200 கோடி வசூல் வாரி குவித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸை வைத்து பிரசாந்த் நில் அவர்கள் சலார் படத்தை இயக்கிய கருகிறார் இந்த படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இந்த படத்தை ஹோம்பாலோ ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் 300 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பாளர்கள் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்ட செலவில் தயாரித்து வரும் இந்த படத்தில் நட்சத்திர நடிகர் பிரித்திவிராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் அவர்கள் முதன்முதலாக நடிக்க வருகிறார். இந்த நிலையில் பிரித்திவிராஜ் பிறந்த நாளான இன்று சலார் படத்தில் இருந்து ஒரு போஸ்டர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் பிரித்திவிராஜ் அவர்கள் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் வில்லனாக கலக்கி கொண்டு வரும் ஜெகபதி பாபு இந்தப் படத்திலும் ஒரு வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளார். வழக்கத்துக்கு மாறாக நடிக்கும் ஜெகபதிபாபு ஆக்ரோஷமான போஸ்டர் வெளியாகி பட்டய கிளப்பியது இந்த நிலையில் தற்போது பிரித்திவிராஜன் பிறந்த நாளான இன்று சலார் திரைப்படத்திலிருந்து ஒரு மிரட்டல் ஆன போஸ்டர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அதாவது இந்த படத்தில் கொடூர வில்லன் போல் தோற்றமளித்து போஸ் கொடுத்து உள்ள போஸ்டர் தற்போது பட குழு வெளியிட்டுள்ளது இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சலார் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.