புதிய திரைப்படங்களை ரசித்துப் பார்ப்பது போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியல்களை காண மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அதேபோல் எந்த சீரியலை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் டிஆர்பி-யில் எந்த சீரியல் எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் எந்த சீரியல் எந்த இடம் பிடித்துள்ளது என்பதை இங்கே காணலாம். முதலிடத்தில் கயல் சீரியல் இருக்கிறது கயலுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் பெரியப்பாவே தற்பொழுது தனது மகனின் காதல் விவகாரத்தில் வசமாக சிக்கிவிட்டார். இது ஒரு புறம் இருந்தாலும் எழில் எப்படியாவது தனது காதலை கயலிடம் சொல்லி விட வேண்டும் என உறுதியாக இருக்கிறார். இதனை தொடர்ந்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வரும் இந்த சீரியல் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
வானத்தைப்போல சீரியல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது துளசிக்கு எதிரான வெற்றியின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது வெற்றியிடம் ராஜபாண்டி சிக்கிவிட்டார். அவரை தேடும் பணியில் மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த சீரியல். இந்த நிலையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தை வானத்தைப்போல சீரியல் பிடித்துள்ளது.
அதேபோல் மூன்றாவது இடத்தில் இனியா என்ற சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பெற்றுள்ளது இந்த சீரியலில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு திருமணம் முடிந்த நிலையில் தற்போது புது பிரச்சனை தொடங்கியுள்ளது. இந்த சீரியலில் ஆண்களுக்கு கீழ் பெண்கள் அடங்கி தான் இருக்க வேண்டும் என்ற முரண்பாடான கொள்கையில் நகர்ந்து வருகிறது அதனால் இந்த சீரியலை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள் இந்த நிலையில் டி ஆர் பி எல் மூன்றாவது இடத்தில் இந்த சீரியல் இருந்து வருகிறது.
அதேபோல் நான்காவது இடத்தில் எதிர்நீச்சல் சீரியலும். ஐந்தாவது இடத்தில் சுந்தரி சீரியலும் டிஆர்பி யில் இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆறாவது இடத்தில் மிஸ்டர் மனைவி என்ற சீரியல் இடம் பிடித்துள்ளது. ஏழாவது இடத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியல் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது இதற்கு முன்பு பாக்கியலட்சுமி சீரியல் டி ஆர் பி எல் நல்ல ரேட்டிங் பெற்று வந்த நிலையில் இந்த வாரம் கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்து விட்டது.
எட்டாவது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும் ஒன்பதாம் இடத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் பத்தாவது இடத்தில் கார்த்திகை தீபம் சீரியலும் டிஆர்பி யில் இடம் பிடித்துள்ளது…