பல மாதங்கள் கழித்து வந்த உறுதியான தகவல்..! பொங்கல் வின்னர் துணிவா.? வாரிசா.?

thunivu
thunivu

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக பார்க்கப்படுபவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் வருடத்திற்கு ஒரு படத்தை இறக்கி விடுகின்றனர் அந்த வகையில் அஜித் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து “விடாமுயற்சி” படத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார் மறுபக்கம் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இறுதி கட்டப்படிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. லியோ படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் படமாக உருவாகி வருகிறது படத்தில் விஜயுடன் இணைந்து மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் நடித்த துணிவு விஜய் நடித்த வாரிசு படங்கள் கடைசியாக நேருக்கு நேர் மோதின இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஆனால் உண்மையில் பொங்கல் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

அதன்படி தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் உண்மையில் விஜயின் வாரிசு திரைப்படம் கேரளா மற்றும் கல்ஃப் இடங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தியது இதனால் உண்மையான வின்னர் துணிவு தான் என கூறப்படுகிறது.

மேலும் துணிவு படத்தை எடுத்த இயக்குனர் ஹச். வினோத் அடுத்ததாக கமலை வைத்து படம் பண்ணுகிறார் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை எடுத்த இயக்குனர் வம்சி தற்பொழுது எந்த ஒரு படமும் இல்லாமல் இருக்கிறார் இருக்கிறார் என்று ரசிகர்கள் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது