திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை அருகே திருமலாபுரம் கிராமத்தில் கண்ணைக் குளம் பகுதியில் ஊரடங்கு மீறி இளைஞர்கள் ஒன்றுகூடி சமபந்தி போஜனத்தில் நடத்தியுள்ளார்கள் அந்த வீடியோ காட்சிகளை அவர்களே தங்களுடைய வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களில் பந்தாவாக பதிவேற்றி பக்கத்து கிராமத்தில் இருக்கும் இளைங்கர்களுக்கு கறி விருந்து விடியோ காட்டியுள்ளார்கள்.
நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கொரோனா வைரசை கட்டுபடுத்த மிகவும் போராடி வருகிறது, அதனால் பல இடங்களில் கறிக்கடை என அனைத்தையும் தடைவிதித்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக இடைவெளி வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாவட்டமும் பாடுபட்டு வருகிறது.
காவல்துறையினர் அனைவரும் தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் இந்த கொரோனா வைரஸை ஒழிக்க பரப்பட்டு வருகிறார்கள், இவர்களை எல்லாம் பொருட்படுத்தாமல் சிந்திக்காத அடங்காத இளைஞர்கள் கறி விருந்து வைத்து வாழை இலையில் பரிமாறி வெளுத்து வாங்கியதை வீடியோவாக எடுத்து அதனை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இல் வைத்தனர்.
இந்த வீடியோ மிகவும் வைரலான நிலையில் தற்பொழுது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ மற்றும் புகைப்படத்தை வைத்து அதில் உள்ள இளைஞர்கள் யார் யார் என்று காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள், இந்நிலையில் கறிவிருந்து வீடியோவில் கலந்துகொண்ட சில இளைஞர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர்களில் திருவள்ளூர் அருகே உள்ள திம்மபூபலபுரம் கிராமத்தை சேர்ந்த கொக்கி குமாரு, இளையபாரதி உள்ளிட்டவர்கள் என்பதை உறுதி செய்துள்ளார்கள் மேலும் அதில் இருந்து 9 பேர் மீது வழக்குப்பதிவு பட்டு விசாரணை செய்து மற்ற இளைஞர்களையும் காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.
தமிழக அரசு என்னதான் தடை உத்தரவு போட்டாலும் பொதுமக்கள் நோயின் தாக்கத்தை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.