தமிழ் சினிமாவில் திரைப்படத்திற்காக தன்னையே வருத்திக்கொண்டு பல சாகசங்களை செய்து வரும் ஒரு நடிகர் என்றால் அது விக்ரம் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஆரம்பத்தில் சினிமாவுக்காக வாய்ப்பு தேடி பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தது மட்டுமில்லாமல் இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக கூட பணியாற்றி உள்ளார்.
அதன் பிறகு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நமது நடிகர் விக்ரம் அவர்கள் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டியதன் மூலமாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் இயக்குனர் கௌதம மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.
மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வருமா, ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் 90 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் கௌதம் மேனன் மற்றும் விக்ரம் ஆகிய இருவருக்கும் பல்வேறு பிரச்சனைகளும் மோதல்களும் ஏற்பட்டது இதனால் விக்ரம் இந்த திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.
அந்த வகையில் இந்த பிரச்சனைகள் எப்பொழுது முடிந்து திரைப்படம் வெளியாக்குமோ என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வந்தார்கள் இந்நிலையில் இந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வேலையை ஆரம்பம் செய்துள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் இதனை உறுதி செய்யும் வகையில் கௌதம் மேனன் அவர்கள் விக்ரமுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த புகைப்படத்துடன் நட்சத்திரங்கள் மீண்டும் சேருகிறது என்ற மற்றொரு பதிவையும் வெளியிட்டுள்ளார் இதனால் துருவ நட்சத்திரம் திரைப்படம் உருவாகப் போகிறது என ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.