தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் கார்த்தி அவர் நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேர்ப்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் நடிகர் கார்த்தி அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் அமீர் சுல்தான் அவர்கள் 2007 ஆம் ஆண்டு இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் குட்டி சாக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்தான் விமல் ராஜ். பருத்திவீரன் திரைப்படத்தின் பிறகு விமல் ராஜ் அவர்கள் வேற எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார்? தற்போது என்ன செய்து வருகிறார் என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
இந்த நிலையில் விமல் ராஜை அதாவது குட்டி சாக்கு பிரபல யூட்யூப் சேனலில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். குட்டி சாக்கு மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி பக்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் வசித்து வருகிற என்னுடைய அப்பா இறந்து விட்டதால் குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு மதுரைக்கு சென்றேன். அதன் பிறகு எனக்கு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தில் வேலை கொடுத்தார்கள். தற்போது நான் லோடுமேன் அதாவது சுமை தூக்கும் தொழிலாளி வேலையை பார்த்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
நான்கு வருடங்களாக இந்த வேலையை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனக்கு பருத்தி வீரன் பட வாய்ப்பு கிடைக்கும்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் மேலும் என்னை தெரிந்த நண்பர்கள் மூலம் பள்ளியில் விசாரித்தனர். அப்போது என்னுடன் நான்கு ,ஐந்து பேரை எடுத்தார்கள். அப்போது என்னையும் என்னுடன் படித்த கருவாச்சி கதாபாத்திரத்தில் நடித்த அந்த பெண்ணையும் தேர்வு செய்தார்கள்.
நான் அந்த படுத்திருக்கும் முன் எந்த படத்தில் நடித்தது இல்லை. முதல் படத்தில் நடித்தது எனக்கு கொஞ்சம் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது அதன் பிறகு போக போக அதுவும் சரியாகி விட்டது. மேலும் பருத்திவீரன் படிச்சிருக்காக ஒரு ஆண்டுகள் நான் பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை என்று கூறியுள்ளார்.
பருத்திவீரன் படத்தில் நடித்து முடித்த பிறகு நான்கு வருடங்கள் கழித்து என்னுடைய கண்ணை வைத்து தான் அடையாளம் தெரிந்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார். உங்களுடைய கண் இப்படி ஆனதற்கு என்ன காரணம் என்று கேட்டனர் அதற்கு கண்ணில் குச்சி பட்டு இந்த மாதிரி ஆகிவிட்டது மருத்துவர்கள் இதை சரி பண்ண முடியாது என்றும் குறிப்பிட்டார்.
தற்போது எனக்கு திருமணம் ஆகிவிட்டது குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காக வேற வழி இல்லாமல் தற்போது சுமை தூக்கும் வேலையை செய்து வருகிறேன் இந்த வேலை எனக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு இருந்தாலும் பழகிவிட்டது என்று கூறியுள்ளார்.