எடுத்த படம் மூன்று தான்.. சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவு கோடியா.? லோகேஷ் கனகராஜை கண்டு வியக்கும் ரசிகர்கள்.

lokesh
lokesh

தமிழ் சினிமாவில் நுழைந்து சில திரைப்படங்களிலேயே இருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மெகா ஹிட்டடித்த காரணத்தினால் தற்போது தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தைப் பிடித்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் முதலில் மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து பாடல்களே இல்லாமல் நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்னும் ஒரு மாபெரும் ஆக்சன் படத்தைக் கொடுத்தார். இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் எடுத்ததை தொடர்ந்து தளபதி விஜய் உடன் வரும் வாய்ப்பை பெற்றார் மாஸ்டர் வெற்றியடைந்த பின் இவரது வளர்ச்சியை தமிழ் சினிமாவில் அதிகரித்தது.

அடுத்த கட்டமாக  இப்போ உலக நாயகன் கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விக்ரம் படத்தை எடுத்து வருகிறார். கமலுடன் கைகோர்த்து இந்த படத்தில் பகத் பாசில், விஜய்சேதுபதி, விஜே மகேஸ்வரி, ஷிவானி நாராயணன், மைனா நந்தினி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

விக்ரம் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக தற்பொழுது போய்க்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை தளபதி விஜய் உடன் கைகோர்த்து இருக்கிறார் என்ற தகவல் உலா வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்களின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி பார்வையில் லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு  11 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது. குறுகிய காலத்திலேயே இவ்வளவு கோடி சம்பாதிப்பது பெரிய விஷயம் என கூறிவருகின்றனர் ரசிகர்கள்.