நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக “சூர்யாவை” எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்..! சமூக வலைதளபக்கத்தில் வைரல்.

surya
surya

நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த ஜெய் பீம், சூரரை போற்று, எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது.

தற்போது கூட பல்வேறு சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து சூர்யா நடித்து வருகிறார் அந்த வகையில் முதலாவதாக இயக்குனர் பாலாவுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் சிறுத்தை சிவா உடன் திடீரென ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அதன் பின் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடனும் இவர் கைகோர்க்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சூர்யாவின் மார்க்கெட் தற்போது உச்சத்தை நோக்கி செல்கிறது சினிமா உலகில் இவர் நடிப்பதையும் தாண்டி படங்களை தயாரிப்பதால் நடிகர் சூர்யாவுக்கு நாலா பக்கமும்  தற்போது காசு மழை பொழிகிறதாம்..

இப்படி இருக்கின்ற நிலையில் சூரியா பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா முதன் முதலில் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் இந்த படத்தில் சூர்யாவுடன் கைகோர்த்து விஜய் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.

நேருக்கு நேர் திரைப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படம் அதன் பிறகு தான் சூர்யாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தது இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாக அவர் ஒரு போட்டோ சூட் நடத்தி உள்ளனர் அப்பொழுது எடுக்கப்பட்ட அந்த அழகிய புகைப்படம் இணையதள பக்கத்தில் தற்பொழுது பேசும் பொருளாக மாறி உள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..