கையில் கட்டுடன் நடிகர் சிம்பு..! வெந்து தணிந்தது காடு படப்பிடிப்புத் தளத்தில் இருந்து லீக்கான புகைப்படம்..!

simbu-2
simbu-2

ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகர் சிம்பு இவர் சமீபத்தில் மாநாடு மகா ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் மிக தீவிரமாக நடித்து வருகிறார். இவர் இதை தொடர்ந்து சமீபத்தில் கொரோனா குமார் மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சிம்பு நடிக்கும் வெந்து தனிந்தது காடு என்ற திரைப்படமானது சிம்புவிற்கு 47வது திரைப்படமாக அமைந்துள்ளது. ஏற்கனவே சிம்பு அச்சம் என்பது மடமையடா, விண்ணை தாண்டி வருவாயா ஆகிய இரண்டு திரைப்படங்கள் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர்கள் மூன்றாவது முறையாக ஒன்று சேர்வதன் காரணமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறி விட்டது. மேலும் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளராக ஐசரி கணேஷ் அவர்கள் இந்த திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும் இத் திரைப்படமானது ஒரு த்ரில்லர் ஆக்ஷன் திரைப்படமாக அமைய உள்ளதாக கூறப்படுகிறது மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருச்செந்தூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பட குழுவினருடன் நடிகர் சிம்பு அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது.  இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தில் சிம்புவின் கையில் கட்டுப்போட்டு உள்ளதுபோல  தெரியவந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் எடுக்கப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

simbu-1
simbu-1

இவ்வாறு சிம்புவின் அப்டேட்களை பார்த்த ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளை உண்டாக்கி கொண்டது மட்டுமல்லாமல் ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.