கொரோனா இரண்டாம் கட்ட அலை வேகம் எடுத்துள்ளதால் இதிலிருந்தே மக்களை பாதுகாத்துக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருவதோடு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தி வருகிறது. ஆனால் சிலர் மெத்தனப் போக்கால் இருந்து வருவதால் இந்த தொற்று மென்மேலும் பரவி இழப்புக்கள் அதிகமாகின்றன.
கொரோனா பாதிப்பை நன்கு அறிந்த பலரும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்கின்றனர் இருப்பினும் விழிப்புணர்வை வெளிப்படுத்தினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது பெரும் பாதிப்பையே கொடுக்க நேரிடும் என்பதை உணராமல் இருக்கின்றனர்.
இப்படியிருக்க சினிமா பிரபலங்கள் பலரும் முன் வருவதால் அவரை பார்த்து அவரது ரசிகர்களும் மக்களும் தாகத்தை புரிந்து தற்போது தானாகவே வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர் அந்த வகையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் போன்றோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
அவர்களை தொடர்ந்து தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலங்கி வரும் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி தற்பொழுது தன்னை தற்காத்துக் கொள்ள பாதுகாப்பு எச்சரிக்கையாக தடுப்பூசி போட்டுக்கொண்டார். அந்த புகைப்படத்தை டிடியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பின் மருத்துவரிடம் பேசியது நான் ஏற்கனவே சில மருந்துகளை எடுத்து வருகிறேன் இதனால் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் என பயந்தேன் பின் மருத்துவரின் ஆலோசனையை கிணங்க நான் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன் இது இப்போதைய காலகட்டத்தில் மிக முக்கியமானது.
உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால் அந்த மாத்திரையை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு தடுப்பூசி போட்டுக் போட்டுவிடுவது நல்லது.