விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஒரு வழியாக ஜூன் 9ஆம் தேதி கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர் இவர்களை கல்யாணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்கி – நயன்தாரா கல்யாணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்து அசத்தினார். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசுப் பொருட்களையும் கொடுத்து அழகு பார்த்துள்ளது விக்கி நயன்தாரா ஜோடி திருமணம் முடிந்த பிறகு விக்கி நயன்தாரா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று உள்ளனர்.
நயன்தாரா மஞ்சள் சேலையில் தேவதை போல் ஜொலிக்க விக்னேஷ் சிவன் வேட்டி சட்டையில் வந்து அசத்தினார் சாமி தரிசனம் செய்வதற்காக போயுள்ளனர் தேவஸ்தானத்தை ஆட்கள் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்து வைத்தனர். இப்படி இருந்த நிலையில் நயன்தாரா வந்ததை அறிந்த பக்தர்கள் அனைவரும்.
திடீரென விக்கி நயன்தாராவை சூழ்ந்துகொண்டனர் உடனே பவுன்சர்கள் உதவியுடன் கூட்டத்தில் இருந்து வெளியேறி புறப்பட்டனர் ஆனால் இந்த திருப்பதிக்கு வந்த பொழுது விக்கி நயன்தாராவை ஒரு நபர் கோபப்படுத்தி பார்த்து உள்ளனர் ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால் கூட்டத்தை கட்டுபடுத்த பவுன்சர்கள்கள் விக்கி -நயன்தாராவை சூழ்ந்து கொண்டனர் ஆனால் கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென நயன்தாராவின் கையை பிடித்து இழுத்து விட்டார்.
அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. நயன்தாராவின் கையை விட உடனேயே அந்த நபரை நோக்கி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கோபமுடன் பார்த்தார் உடனே கணவன் விக்னேஷ் சிவனும் அந்த நபரை முறைக்க உடனடியாக அந்த நபர் அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டாராம்.