தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சினேகா. இவர் நடிப்பில் மட்டும் சிறந்தவர் கிடையாது எவ்வகையிலும் சிறந்தவர் தான் என்ற வகையில் இவரை பலரும் புன்னகை அரசி என்றே அழைத்து வருகிறார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தது மட்டும் இல்லாமல் தனக்கு மவுசு குறைந்த நேரத்தில் பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டியாக வாழ்ந்து வருகிறார்.
என்னதான் தற்போது இவருக்கு திருமணமாகி குடும்பமாக இருந்தாலும் தற்போது வரை ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை சினேகா
இந்நிலையில் பிரசாந்த் என்பவர் சினேகாவின் நெருங்கிய நண்பர் அந்த வகையில் 25 லட்சம் ரூபாயை புதிய சிமென்ட் கம்பெனியில் போடுமாறு சினேகாவை பிரைன்வாஷ் செய்துள்ளார். இதனை நம்பி சினேகா முதலீடு செய்துள்ளார் ஆனால் அந்த கம்பெனியிலிருந்து எந்த ஒரு லாபமும் கணக்குகளும் தனக்கு காட்டவில்லை இதன் காரணமாக பேச்சுவார்த்தை நடத்தி பார்த்துள்ளார்.
மேலும் பேச்சுவார்த்தை செல்லுபடி ஆகாது காரணமாக நடிகை சினேகா போலீஸ் ஸ்டேஷன் படியேறி உள்ளார். இந்நிலையில் சினேகாவிற்கு என்ன தீர்வு கிடைக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.