பொதுவாக சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ரசிகர் மன்றம் உருவாகுவது வழக்கம் இப்படிப்பட்ட நிலையில் நடிகர் அஜித் தனக்கான ரசிகர் மன்றம் வேண்டாம் என நிராகரித்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் அஜித் ரசிகர் மன்ற நிர்வாகி எனக்கூறி மோசடியில் ஈடுபட்டதாக வெளியாய் இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதாவது தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் அஜித் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் சில திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் கூட வசூல் வேட்டையை நடத்தி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறது.
அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றதை அடுத்து தற்பொழுது அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது எனவே இந்த திரைப்படத்தினை வெளியிடுவதற்கான போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் காசேதான் கடவுளடா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
தனக்கான ரசிகர் மன்றம் தேவை இல்லை என நிராகரித்து வந்தாலும் தன்னுடைய ரசிகர்கள் மூலம் பல நற்பணிகளை செய்து வருகிறார் அஜித். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அஜித் மன்ற நிர்வாகி எனக் கூறி சிவா என்பவர் ராஜேஸ்வரி-ஐயப்பன் என்ற தம்பதியினர்களிடம் ஒரு லட்சம் மோசடி செய்துள்ளார். இந்த நிகழ்வு திருநெல்வேலி மாவட்டம் விக்ரம் சிங்கபுரம் கட்டப்புள்ளி என்ற பகுதியில் நடைபெற்றுள்ளது.
அதாவது ஐயப்பன் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் என கூறப்படுகிறது அதனை பயன்படுத்தி சிவா என்பவர் மாவட்ட வாரியாக மிகவும் கஷ்டப்படும் குடும்பங்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அஜித்தை இலவசமாக வீடு கட்டி தருவதாக கூறியுள்ளார். எனவே இதனை முதலில் ஐயப்பன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியினர்கள் நம்பவில்லை பிறகு சுரேஷ் சந்திரா என்ற அலுவலகத்தில் பணிபுரியும் சங்கர் என்பவரை சிவா தயார் செய்து அதன் பிறகு ஐயப்பன் மற்றும் ராஜலட்சுமி அழைத்து சங்கருடன் பேச வைத்திருக்கிறார்.
மேலும் இதற்காக 15 லட்சம் வீடு கட்ட வங்கி கணக்கிற்கு வரும் என தெரிவித்துள்ளார் ஆனால் பத்திரப்பதிவுக்கு மட்டும் ஒரு லட்சம் தேவை எனக் கூறி சிவா மோசடி செய்துள்ளார். எனவே இதனை எடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐயப்பன் மற்றும் அவருடைய மனைவி சிவா மீது புகார் அளித்துள்ளார்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்கள் இதனை அடுத்து காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.