தென்னிந்தியா சினிமாவில் எம்பது மற்றும் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகள் ஒருவர்தான் நடிகை குஷ்பூ. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் நடிக்கும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த புகழ் பெற்ற விளங்கினார். அது மட்டுமல்லாமல் குஷ்பூவுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.
தொடர்ந்து நடிகை குஷ்பு அவர்கள் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரபல இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் அதன் பிறகு சரிவர படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நடிகை குஷ்பு ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது நடிகை குஷ்பு அவர்கள் சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை குஷ்பு அவர்கள் குண்டாக இருந்து வந்த நிலையில் உடற்பயிற்சியின் மூலம் தனது உடல் எடையை குறைத்து மெல்லிய உடலில் தோற்றமளிக்கும் நடிகை குஷ்பூ தற்போது இளம் நடிகைகளுக்கு போட்டியாக போஸ் கொடுத்து வருகிறார்.
இதனை தொடர்ந்து நடிகை குஷ்பு அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருந்தார் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு ரசிகர் நடிகை குஷ்புவை மிக கேவலமாக வர்ணித்து கமெண்ட் செய்து உள்ளார்.
அதை பார்த்த பிரபல சீரியல் நடிகை ஷர்மிளா அவர்கள் அந்த நபர் செய்த கமென்ட்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு திட்டி தீர்த்து உள்ளார். இதை பார்த்த அந்த நபர் குற்றத்தை உணர்ந்து இனிமேல் இது போன்ற செயலை நான் செய்ய மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று மெசேஜ் பண்ணி உள்ளார். குஷ்பு புகைப்படத்தை விட இவர்களுடைய கமெண்ட் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி பரவி வருகிறது.