நடிகர் விஜய் சேதுபதியை அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர் – ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த புகைப்படம்.!

vijay-sethupathy

தமிழ் சினிமா உலகில் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் போன்ற எதுவாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக மாறி உள்ளார் விஜய் சேதுபதி. இந்த வருடம் இவரது மூன்று படங்கள் வெளிவந்துள்ளது.

அதன்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சுமாரான வசூலைப் பெற்றது. அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் கமலஹாசனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து பின்னிப் பெடல் எடுத்து இருந்தார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்கள் பலரும் பாராட்டும்படி அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த கமலஹாசன் நடிக்க உள்ள படங்களிலும் விஜய்சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டாவது முறையாக இயக்குனர் சீனு ராமசாமியுடன் கைகோர்த்து மாமனிதன் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சில தினங்களுக்கு முன்புதான் திரையரங்கில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருடத்திற்கு ஆறு ஏழு திரைப்படங்களை கொடுத்து பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஜய் சேதுபதி போலவே அச்சு அசல் சின்னத்திரையிலும் ஒரு நடிகர் வலம் வருகிறாராம். ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகிவரும் கனா காணும் காலங்கள் சீரியலில் அவர் நடித்து வருகிறார். அவர் பார்ப்பதற்கு அச்சு அசல் விஜய் சேதுபதி போலவே இருப்பதால் அவரது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

vijay-sethupathy
vijay-sethupathy