தீனா படத்தில் அஜித்திடம் அடிவாங்கிய நபர்.? இப்போ மிகப்பெரிய இயக்குனர்.? யார் அது தெரியுமா.? வைரல் நியூஸ் இதோ.

ajith
ajith

90 காலகட்டங்களில் இருந்து நடித்து வரும் அஜீத் பல்வேறு விதமான வெற்றி தோல்வி படங்களை சினிமா உலகில் கொடுத்து இருக்கிறார் ஆனால் இது எல்லாம் அவரது ரசிகர்களுக்கு தெரிந்தும் அவரை தலையில் தூக்கி வைத்து அழகு பார்க்கின்றனர்.

அஜித்தின் பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தாலும் இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் எப்பொழுதும் ரசிகர் மனதில் இருந்து நீங்காத இடம் பிடிக்கும் அந்த வகையில் தற்போது விசுவாசம், மங்கத்தா, ஆரம்பம், பில்லா போன்ற அடுத்தடுத்த லிஸ்ட்டில் இருந்தாலும் 2001 ஆம் ஆண்டு வெளியான தீனா திரைப்படம் யாரும் மறக்க முடியாத திரைப்படம்.

இந்த படத்தில்  காதல், ஆக்ஷன் போன்றவை கலந்து இருந்ததால் படம் வெளிவந்து அனைத்து தரப்பட்ட மக்கள் மற்றும் ரசிகர்களையும் தியேட்டருக்கு அழைத்தது. இந்த திரைப்படத்தை மிக நேர்த்தியாக ஏ ஆர் முருகதாஸ் எடுத்திருந்தார். இந்த படத்தில் அஜித், லைலா, சுரேஷ்கோபி, நக்மா, சிம்ரன், தாடி பாலாஜி, சம்பத், சியான் கணேஷ், மகாநதி சங்கர்  போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

இந்த படம் வருவதற்கு முன்பாக பெரும்பாலும் காதல் மற்றும் குடும்ப கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அஜீத் தீனா படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக பார்க்கப்பட்டார் அஜித் தீனா படத்தில் வரும் ஒவ்வொரு சீனும் பட்டையை கிளப்பின.

அதிலும் குறிப்பாக பீட்சா ஷாப்பில் லைலாவை ஒரு கும்பல் கேலி செய்து கொண்டிருக்கும் அப்பொழுது அஜித் வந்து தனது ஆயுதங்களை வெளியே எடுத்து வைத்து செம மாஸ் காட்டுவதோடு மட்டுமல்லாமல் அவர்களை அடித்து வைப்பார். அப்போது பலர் அடி வாங்குவார்கள் அதில் ஒருவராக பிரேமம் பட இயக்குனரும் அந்த படத்தில் நடித்திருந்தார்

அப்பொழுது தெரியாது இவர் இவ்வளவு பெரிய இயக்குனராக மாறுவார் என்று தற்போது இந்திய அளவில் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவராக அல்போன்ஸ் புத்திரன் இருக்கிறார். இவர் அஜித் படத்தில் நடித்ததை பலரும்கவனித்திருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

alpose puthiran
alpose puthiran

அல்போன்ஸ் புத்திரன் பிரேமம் படம் எடுப்பதற்கு முன்பாக தமிழில் பல குறும்படங்களை இயக்கியவர்.