அந்த ஹீரோவோட நடிப்பு பெருசா சொல்லுறது இல்லை.. அவருடைய அப்பா சினிமாவில் ஆள் – அப்பாஸ் பேச்சு

Abbas

Abbas : 80,  90 காலகட்டங்களில் புகழ் பெற்ற நடிகர்கள் பலரும் இன்று காணாமல் போய்விட்டனர் அப்படி ஒருவரை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. அவர் வேறு யாருமல்ல நடிகர் அப்பாஸ் தான். 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்னும் படத்தில் நடித்த அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பூச்சூடவா, படையப்பா, சுயவரம், ட்ரீம்ஸ், மின்னலே, காதல் வைரஸ், காதலுடன், ஆனந்தம் என  காதல் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் படங்களில் நடித்து பெண் ரசிகைகளை அதிகமாக கவர்ந்து இழுத்தார் இப்படி திரையுலகில் வெற்றி நடிகராக ஓடிய இவர் 2015 ஆம் ஆண்டு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

அதன் பிறகு தனது குடும்பத்துடன் நியூசிலாந்து சென்று அங்கு வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர் இருவருமே தற்பொழுது ஒரே நல்ல நிலைமையில் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் அப்பாஸ்  தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகளை குறித்து பேசி வருகிறார்.

அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்ரன் பற்றி பேசினார். சிம்ரன், நீங்களும் ஜோடி சேர்ந்து நடித்த போது காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது  அது எல்லாம் உண்மையா என கேட்டதற்கு என அப்பாஸிடம் கேட்க.. சிம்ரன் நானும் தமிழில் இரண்டு படமும், தெலுங்கில் ஒரு படமும் பண்ணினோம் அவர் எனக்கு நல்ல நண்பர் ஆனால் நாங்கள் காதலிக்கவில்லை எனக் கூறினார்.

prashanth
prashanth

அதனைத் தொடர்ந்து விஷாலை பற்றி பேசினார் தற்பொழுது நடிகர் பிரசாந்தை பற்றியும் பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. தனக்கு நல்ல நண்பர் என்றும், நன்றாக நடனமாடுவார் ஆனால் நடிப்பு பெரிதாக கவர்ந்தது இல்லை அவருடைய அப்பா சினிமாவில் பெரிய ஆள் என்பதால் தங்களைப் போல் கஷ்டப்பட்டு வளரவில்லை என பதிலளித்தார்.