தமிழ் சினிமாவில் குறைந்த படங்களை இயக்கிய முன்னணி நட்சத்திரமாகவும், பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரையும் பெற்றவர் இயக்குனர் ஷங்கர்.
தமிழ் திரை உலகில் இதுவரை குறைந்த படங்கள் கொடுத்தாலும் ஒவ்வொரு திரைப்படமும் இன்றளவும் பேசும் அந்த அளவிற்கான படங்களை கொடுப்பதையே வழக்கமாக வைத்துள்ளார்.
அப்படித்தான் எந்திரன் திரைப்படமும் பேசப்பட்டது. ஷங்கருக்கு எவ்வளவு பெரிய படமோ அதே போல தான் ரஜினிக்கு மிகப்பெரிய படமாக அமைந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் கதை திருட்டுக்கதை என கூறி இயக்குனர் சங்கரின் மேல் வழக்கு பதிவு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை எடுத்த எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்து ஜாமீனில் வெளி வராதபடி ஷங்கருக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இச்செய்தி தற்போது தமிழ் திரை உலகை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இங்கே இதுபோன்ற ஒரு நிலைமை என ஆச்சரியத்தில் உள்ளனர் மக்கள்.