தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவி தொடர்ந்து ஏராளமான பிரபலங்களை தங்களுடைய நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தருகிறார்கள் மேலும் அந்த பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் இதன் மூலம் தனி ஒரு இடம் உருவாகி விடுகிறது.
அந்த வகையில் ஒரு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்பொழுது மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி பங்குபெற்ற ஒரு நடிகை பண விஷயத்தில் அதிகம் கோல்மால் போடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் திரைப்படம் தான் நாய் சேகர் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பவித்ரா லட்சுமி நடித்து வருகிறார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் தயாரிப்பு நிறுவனம் படத்திற்கு ஆடிஷன் செய்ய அழைத்து இருக்கிறார்கள் மேலும் அதற்கு விமான டிக்கெட் உள்ளிட்டாவை அந்த நிறுவனமே பொறுப்பேற்று இருந்ததாகவும் இதன் மூலமாக ஆட்டிஷனில் கலந்து கொள்ளுமாறு கூறியுள்ளார்கள்.
அதற்கு பவித்ரா லட்சுமி நானே விமான டிக்கெட் போட்டுவிட்டு வந்துவிடுகிறேன் எனக்கு நீங்கள் பணமாக கொடுத்தால் போதும் என தெரிவித்தாராம் அதற்கு அந்த நிறுவனமும் ஒப்புக்கொண்டு உள்ளது. ஆடிஷன் தேதி வந்தவுடன் பவித்ரா லட்சுமிக்காக அந்த நிறுவனம் காத்துக் கொண்டிருக்கிறது ஆனால் பவித்ரா லட்சுமி அன்றைய தினம் ஆக்ஷனுக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
உடனே மறுநாள் நிறுவனத்திற்கு போன் செய்து பேசியவர் நான் விமான டிக்கெட் புக் செய்து கிளம்பும் தருணத்தில் அவசர வேலையாக வேறு ஒரு இடத்திற்கு சென்று விட்டதாக கூறியுள்ளார் மேலும் அந்த விமான டிக்கெட் புக் செய்த செலவு 13,000 பணம் தனக்கு நஷ்டமாகி உள்ளதாகவும் இதனால் நீங்கள் வங்கி கணக்கில் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பவித்ரா லட்சுமி அந்த நிறுவனத்திடம் கூறியுள்ளாராம் இதுவரை இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்துவிட்டு ஓவர் சீன் போடுறார் என கழுவி ஊற்றிய வருகிறார்கள்.