“தாயுடன் எதிர்ப்பு” கையில் குழந்தை காதலால் ஏமாந்து போன மனோரமாவின் மறுபக்க வாழ்க்கை..!

manoramma-2
manoramma-2

தமிழ் சினிமாவில் தன்னுடைய சிறந்த திறமையின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ஆச்சி மனோரமா இவர் திரையில் பல்வேறு ரசிகர்களை சிரிக்க வைத்து இருந்தாலும் இவருடைய திருமண வாழ்க்கை பலரையும் அழ வைத்துள்ளது.

நடிகை மனோரமா சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக பல்வேறு மேடை நாடகங்களில் நடித்து வந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் நாடக கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருந்த ராமநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது தொடர்ந்து அது பின்னர் காதலாக மாறிவிட்டது.

ஆனால் இவர்களுடைய காதலை மனோரமாவின் தாயார் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை இதனால் இவர்கள் இருவரும் திருச்செந்தூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள் அதன் பிறகு மனோரமாவின் தாயார் அவர்களுடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் மனோரமா தாய்மை அடைந்து விட்டார்.

இவ்வாறு வயிற்றில் குழந்தை இருந்தும் கணவனின் கட்டாயத்தின் காரணமாக 9 மாதங்கள் வரை நாடகங்களில் நடித்து வந்தார் பின்னர் சொந்த ஊருக்கு சென்ற பிறகு இவர்களுக்கு குழந்தை பிறந்தது ஆனால் குழந்தை பிறந்த ஒரு மாதம் கழித்துதான் ராமநாதன் மனோரமாவின் குழந்தையையும் பார்க்க வந்தார்.

அதுமட்டுமில்லாமல் இவர் வந்தவுடன் குழந்தை மற்றும் மனோரமா ஆகியோர் பற்றி விசாரிக்காமல் உடனே நாடகத்தில் நடிக்கவேண்டும் சீக்கிரமாக கிளம்பு என வற்புறுத்தியதன் காரணமாக மனோரமா அதற்கு மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அதன் பிறகு ராமநாதன் மனோரமாவை சந்திக்கவே இல்லையாம்.

பின்னர் சென்னையில்  திரைப்பட வாய்ப்பு மனோரமாவுக்கு கிடைத்தது மட்டுமின்றி அவருடைய கணவரிடமிருந்து விவாகரத்தும் கிடைத்தது அந்தவகையில் இனிமேல் இவருடன் வாழ முடியாது என்ற காரணத்தினால் மனோரமாவும் விவாகரத்து கொடுத்து விட்டார்.

மேலும் மனோரமாவின் கணவன் இறந்த பொழுது அவருடைய இரண்டாம் மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் தன்னுடைய மகனை அழைத்து சென்று இறுதி சடங்கை செய்து வைத்துள்ளார்.