விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி சமீபத்தில் அறிமுகமாகி மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் ப்ரோமக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதாவது பிக்பாஸ் வீட்டில் மிகவும் பெண்களிடம் வம்பு வளத்தி வரும் அசல் தற்போது தனலட்சுமியிடம் சண்டை போட்டு இருக்கிறார். அதாவது அசலை பார்த்து தனலட்சுமி அண்ணன் என்ன கூப்பிட அதற்கு பதிலாக அசல் பெரியம்மா, ஆன்ட்டி, அத்தை என பலவற்றையும் கூறி தனலட்சுமியை கூப்பிட்டு வருகிறார்.
இதற்கு முன்பு அசல் ஆயிஷாவிடம் தன்னை டா போட்டு கூப்பிடக்கூடாது என கூறியிருந்தார். இதன் காரணமாக கடுப்பான தனலட்சுமி நீ யாரு என்னை அப்படி கூப்பிடுவதற்கு, நீ எனக்கு சோறு போட்டியா என்ன மிகவும் கோபமாக பேசுகிறார். இவர்களுடைய வாய் சண்டை அடித்துக் கொள்ளாத அளவிற்கு இருந்து வருவதால் பதட்டமடைந்த மற்ற போட்டியாளர்கள் இவர்களை சமாதானப்படுத்த முன் வருகிறார்கள்.
இருந்தாலும் தொடர்ந்து தனலட்சுமி பேசி வர அங்கு இருப்பவர்கள் அனைவரும் தனலட்சுமி மட்டுமே சமாதானப்படுத்துகிறார்கள் இதன் காரணமாக தனலட்சுமி அவனை மட்டும் யாரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறீங்க என்னை மட்டும் எதுக்கு வெளியே அனுப்ப பார்க்குறீங்க என கூறுகிறார். இவ்வாறு சக போட்டியாளர்கள் இடையே கடும் சண்டை நிலவி வருகிறது.
இவ்வாறு தேவையில்லாமல் பெண் போட்டியாளர்களிடம் வாசல் தன்னுடைய வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் வம்பு வளத்தி வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு இந்த ப்ரோமோ சோசியல் மீடியாவில் வைரலாக இது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.