விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன் இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மூன்றாவது வாரத்தில் தற்பொழுது ஏராளமான சண்டைகள், சச்சரவுகள் என விமர்சனங்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் 21 போட்டியாளர்களை களம் இறக்கி இருக்கிறார்கள்.
மேலும் இதனை தொடர்ந்து பிக்பாஸ் ஆறாவது சீசனில் முதல் நபராக சாந்தி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஜி.பி முத்து தானாகவே தன்னுடைய மகனை பார்க்க வேண்டும் என்பதற்காக வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் தீபாவளியை தன்னுடைய குடும்பத்தினர்களுடன் மிகவும் கோலாகலமாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்பொழுது சக போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் படுமோசமாக நடந்து கொள்ளும் நிலையில் யார் அடுத்தடுத்து வெளியாகுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் ஜனனி, அமுதவாணன், தனலட்சுமி, அசீம் என அனைத்து போட்டியாளர்களும் அடித்துக் கொள்ளாத அளவிற்கு சண்டை போட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு ஒருபுறம் போய்க்கொண்டிருக்க மற்றொருபுறம் அசல் கோளாறு பல பெண்களிடம் தகாத வகையில் தொட்டு தடவி மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பினை ஏற்படுத்தி இருக்கிறது எனவே இவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என ரசிகர்கள் உறுதியாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது அசல் கோளாறுடன் நிவாஷினி மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார் மேலும் அவருடன் மட்டும் தான் பேசி வருகிறார். இருவரும் தனியாக பெரும்பாலும் பேசி வரும் நிலையில் தற்பொழுது அசல் கோளாறு நிவாஷினியை கடித்து இருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் கமலஹாசன் அவர்கள் இதையெல்லாம் கேட்கவே மாட்டார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Asal Kolaaru’s Leelai!#BiggBossTamil6
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 26, 2022