தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு தானே பதில் கூறிய அசல் கோளாறு..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

asal-kolaru-1
asal-kolaru-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலமிரங்கிய போட்டியாளர் தான் அசல் கோளாறு இவ்வாறு பிரபலமான நமது போட்டியாளர் இளம் பாடகர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அதுமட்டுமில்லாமல் இவருக்கென மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பு இருப்பதன் காரணமாக தான் ஆரம்பத்தில் இருந்து மக்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமில்லாமல் இவரை ஊக்குவிக்க செய்தார்கள் ஆனால் நாளுக்கு நாள் அவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் பல்வேறு தரப்பு மக்களையும் கோபத்தில் ஆழ்த்தி விட்டது.

இதன் காரணமாகவே அவர் திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் அதன் பிறகு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் அசல் கோளாறு எப்பொழுது பதிவு போடுவார் என பல்வேறு தரப்பு மக்களும் மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் அவர் எந்த ஒரு பதிவையும் வெளியிடவில்லை.

இன் நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சி குறித்து அவர் நடந்து கொண்ட விதத்திற்கு வந்த குற்றச்சாட்டுகள் குறித்து முதன்முறையாக ஒரு வீடியோவில் பேசியுள்ளார் அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் நான் தன்னுடைய உறவினர் வீட்டில் இருப்பது போல் இருந்துவிட்டேன் ஆனால் அவை உங்களுக்கு தவறாக தெரிந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் நான் இப்படித்தான் வளர்ந்தேன் ஆகையால் தான் நான் செய்வது உங்களுக்கு தவறாக தெரிகிறது அது மட்டுமில்லாமல் இந்த தவறை நான் தற்பொழுது புரிந்து கொண்டேன் ஆகையால் இனிமேல் இதனை நான் திருத்திக் கொள்கிறேன் என கூறிய அசல் கோளாறு மீம்ஸ்களில் வருவது போல் நான் எதுவும் தவறாக நடந்து கொள்ளவில்லை அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டிலும் என்னை அதுபோன்று யாரும் கூறவில்லை.

அப்படி வீட்டிற்குள் யாரேனும் எனக்கு கூறினாலும் அட்வைஸ் செய்திருந்தாலும் நான் தன்னை மாற்றிக் கொண்டிருப்பேன் என அசல் கோளாறு கூறிய வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.