மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து பிரபல நடிகர் போட்ட ஒரே ஒரு ட்வீட்..! இணையத்தில் இன்னைக்கு இதுதான் டிரென்ட்.!

vijay
vijay

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் படம் ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டும் ஆனால் ஒருசில காரணங்கள் குறித்து படம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்த நிலையில் இறுதியாக படம் வரும் பொங்கலை முன்னிட்டு 13-ஆம் தேதி வெளியாக உள்ளது என அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை எதிர்பார்த்து வருவது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும் தான் அந்த வகையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தை பற்றி தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

அந்த தகவல் என்னவென்றால் தியேட்டரில் படத்தை பார்ப்பதை விட வேற எந்த அனுபவமும் இல்லை எனவும் தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து படம் திரையரங்குகளில் பாருங்கள் என பதிவு செய்திருக்கிறார்.

அவர் போட்ட ட்விட் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.