தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்பத்திலேயே டாப் நடிகர்கள் ரஜினி அஜித் விஜய் போன்றவர்களுடன் கைகோர்த்து நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்திக் கொண்டவர் நயன்தாரா பின்பு ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா நடிகைகளில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்து கொண்டார்.
ரசிகர்கள் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். இவர் நடித்த படங்களில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் பணியாற்றியதன் மூலம் இருவரும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வருகின்றனர்.
சினிமாவுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று மகாபலிபுரம் அருகிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் கோலாகலமாக நடந்தேறியது இதில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் அதில் ஷாருக்கான், அட்லி, சூர்யா, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, ரஜினி போன்ற பலரும் கலந்து கொண்ட..
நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணத்திற்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணம் முடிந்த குஷியில் விக்னேஷ் சிவன் அவரது சமூக வலைதள பக்கங்களில் திருமண புகைப்படங்களை வெளியிட்டு தனது காதலியைக் கரம் பிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து வருகிறார்.
நேற்று திருமணத்தின்போது நயன்தாரா அணிந்திருந்த நகைகள் அனைத்தும் வைரத்தாலும் மரகதத்தாலும் ஆனவை. அத்துடன் நயன்தாரா 7 அடுக்குகளுடன் கூடிய ஆரம் ஒன்றை அணிந்திருந்தார் இந்த ஆரம் வைரம் மற்றும் ரோஸ் கட்ஸ், போல்கி, மரகத கற்களால் ஆனது. மேலும் நயன்தாரா அணிந்திருந்த வளையல்களும் மரகதத்தால் ஆனது இந்த நகைகள் இந்திய மதிப்பின்படி பல கோடியை தாண்டும் என குறிப்பிடப்படுகிறது