தமிழ் சினிமாவில் சிங்கம்புலி இயக்கத்தில் தேவா இசையமைத்து வெளிவந்த திரைப்படம் தான் ரெட் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக தல அஜித் நடித்திருப்பார். மேலும் இத்திரைப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த கதாநாயகி தான் பிரியா கில்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவிற்கு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது அந்த வகையில் நமது நடிகை இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் வேறு எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை.
இவ்வாறு அஜித்துடன் நடித்த இந்த ஒரு திரைப்படத்தின் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டார் நமது நடிகை இவர் முதன்முதலாக 1996ஆம் ஆண்டு தான் திரையில் உதயமானார் அதுவும் இவர் அறிமுகமான முதல் படமே ஹிந்தி திரைப்படம் ஆகும்.
அதன்பிறகு தமிழ் தெலுங்கு பஞ்சாபி போஜ்புரி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த நமது நடிகையின் திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். என்னதான் இவர் பல மொழிகளில் நடித்து இருந்தாலும் தமிழில் தல அஜித்துடன் நடித்ததன் காரணமாக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.
அதுமட்டுமில்லாமல் இவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே இந்த திரைப்படத்தின் மூலம் உருவாகிவிட்டன மேலும் கடந்த 2006ஆம் ஆண்டு கூட பைரவி எனும் திரைப்படத்தில் இவர் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது திருமணம் செய்துகொண்டு தன்னுடைய குடும்பத்துடன் டென்மார்க்கில் வசித்து வரும் நமது நடிகை ஒரு மாடல் நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.