இந்தியாவில் மிகவும் கோலாகலமாக நடத்தப்படும் தொடர் ஐபிஎல். இதுவரை 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 15வது சீசன் மார்ச் 26ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இதுவரை 8 அணிகள் விளையாடி வந்த நிலையில் இந்த வருடம் 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.
இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் ஐபிஎலை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் ஒவ்வொரு அணியும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரும், கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டனுமான கௌதம் கம்பீர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ஐபிஎல் – லில் எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்த கேப்டன் யார் என்பது குறித்து அவர் பேசி உள்ளார். ஐபிஎல் அதிக முறை கோப்பையை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி தான் அதுவும் குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா கீழ் அந்த அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக இதுவரை இருந்து வந்துள்ளது.
ஒரு கேப்டனாக ரோகித் சர்மா தான் எனது பல நாள் துக்கத்தை அவர் கெடுத்துள்ளார் கிரிக்கெட் உலகில் மிக ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற யாருமே எனக்கு பயத்தை காட்டியது கிடையாது. ஆனால் ரோகித் சர்மாவை மட்டும் எதிர்கொள்ளுவது மட்டும் அளவு ஈஸியானது கிடையாது.
ரோகித் சர்மாவை விட திறமையான கேப்டன் யாரும் கிடையாது. அவர் லேசாக எடை போடக்கூடாது அவர் மிக திறமையான ஒரு கேப்டன் அவரால் பல நாட்கள் தூங்காமல் எப்படி ஜெயிக்க வேண்டும் என நினைத்த நாட்கள் எல்லாம் உண்டு என சொல்லி உள்ளார்.