நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத ஹீரோவாக இருந்து வருகிறார் இவர் கடைசியாக நடித்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக 200 கோடிக்கு மேல் அள்ளியது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இன்னொரு சூப்பரான ஹிட் படத்தை கொடுக்க ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து தனது 61வது திரைப்படத்தில் அஜித் நடித்த வருகிறார்.
மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார் போனி கபூர். அஜித்தும், தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி இளம் நடிகர் வீரா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
AK 61 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது அதில் 80% படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது மீதி இருக்கின்ற 20% படப்பிடிப்பு சென்னை மற்றும் புனே ஆகிய பகுதிகளில் எடுக்கப்பட உள்ளனர்
அதற்கு முன்பாக சிறு கேப் விடப்பட்டுள்ளதால் நடிகர் அஜித் தற்பொழுது வெளிநாடுகளில் சுற்றி திரிந்து வருகிறார். அதன் புகைப்படங்கள் கூட இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் அஜித் தற்போது லண்டனில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று வந்துள்ளார்
அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது அஜித்தின் புதிய கேட்டப் ரசிகர்களை கவர்ந்து இழுத்து உள்ளது இதோ நீங்களே பாருங்கள்.
Ajith sir in London.
| Video: Yathees | @arianoarun | #Ak #Ajith #AjithKumar | #Ak61 | pic.twitter.com/qKGjtfa4Xy
— Ajith (@ajithFC) July 4, 2022