நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா உலகில் கால் தடம் பதித்ததில் இருந்து இப்பொழுது வரையிலும் தனது திறமையை மட்டுமே நம்பி.. தொடர்ந்து காமெடி கலந்த திரைப்படங்களை கொடுக்கிறார். அது ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறுகின்றன இதனால் இவருக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகின..
தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது இதனால் அவரது ரசிகர்கள் அஜித், விஜய் லெவெலுக்கு சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசினார் ஆனால் கடந்த தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன்..
நடித்த பிரின்ஸ் திரைப்படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் சுமாரான வசூலை அள்ளியது இருப்பினும் சோசியல் மீடியாக்களில் இந்த படம் மொக்கை, சுத்த வேஸ்ட் என மீடியாக்களில் பரவின இந்த படம் தோல்வியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து வந்தார் இந்த படத்தின் படப்பிடிப்பு நின்றது.. மேலும் இயக்குனருக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை.
சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு தளத்தில் தகராறு பண்ணுகிறார் என பல தகவல்கள் வெளிவந்தன ஆனால் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை.. மாவீரன் படப்பிடிப்பு சோராக போய்க் கொண்டிருக்கிறது சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை விழுத்த சோசியல் மீடியாக்களில் சில விஷமிகள் இதுபோன்று சிவகார்த்திகேயனை தப்பாக காட்டி வருகின்றனர். இதை யார் செய்கிறார்கள் என்பது இதுவரை தெரியவே இல்லை..
இருப்பினும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை ஒழிக்க இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன நடிகர் சிவகார்த்திகேயன் இதை எதையும் பார்க்காமல் தனது கடின உழைப்பை நம்பி ஓடுகிறார் அவருக்கு நெருக்கமானவர்களும் உங்கள் கடின உழைப்பு வீண் போகாது நீங்கள் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் மீண்டு வருவீர்கள் எனக் கூறி அவருக்கு பக்கபலமாக இருக்கின்றனர்.