Vijay : சினிமாவில் படம் எடுப்பது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது காரணம் லொகேஷன், நடிகர், நடிகைகள் மற்றும் படத்தின் காட்சி சரியாக எடுக்கவில்லை என்றால் இழுத்துக் கொண்டே போகும்.. அதிலும் குறிப்பாக வசனங்கள் சரியாக சொல்லவில்லை என்றால் அடுத்த அடுத்த டேக்குகள் போகும்..
அப்படி சீரியஸான டயலாக்கை சரியாக சொன்னால் ஓகே சற்று மாத்தி சொன்னாலே அது இழுத்து போவதோடு மட்டுமில்லமல் சிரிப்பை வரவைதுவிடும்.. அப்படி ஒரு சம்பவம் தான் விஜய் படத்தில் நடந்துள்ளது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு உலகம் எங்கும் வெளியான திரைப்படம் கத்தி இந்த படம் வெளிவந்து அதிர்வு ஹிட் அடித்தது.
அஜித் சென்னை திரும்பியதற்கு காரணம் என்ன.? வெளியே கசிந்த தகவல்
விஜய் உடன் இணைந்து சமந்தா, சதீஷ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஜீவா (விஜய்) தன்னுடைய விவசாய மக்களை காப்பாற்ற அந்த செய்தியை உலகிற்கு எடுத்துச் சொல்ல நினைப்பாரு ஆனால் எதிர்பாராத விதமாக அவரை பிடித்து கொல்கத்தா ஜெயிலில் அடைத்து விடுவார்கள்.
மற்றொரு விஜய் அங்கிருந்து எஸ்கேப் ஆகிஓடிக்கொண்டிருப்பார் இந்த நிலையில் முதியவர்கள் சிலர் இவர்தான் ஜீவா என நினைத்து அழைத்துக் கொண்டு போய்விடுவார்கள் முதலில் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடப்பார் பிறகு உண்மையான விஷயம் தெரிய நம்மளை போலவே ஜீவா என்றவன் இருக்கிறான் அவன் செய்ய நினைத்ததை நாம் செய்யலாம் என விஜய் இறங்கி அனைத்தையும் செய்து வில்லனை மாட்டி விடுவார் படம் அற்புதமாக இருந்திருக்கும் இந்த படத்தில் ஒரு சீனியில் ஒரு முதியவர் “ஜீவா தம்பி எங்க போனீங்க..
உங்களத் தான் நாள் முழுக்க தேடிட்டு இருந்தோம்” என ஒரு வசனத்தை சொல்ல வேண்டும் ஆனால் அந்த முதியவரோ “விஜய் தம்பி நீங்க எங்க இங்க என கூறிவிட்டார் உடனே விஜயும் “சூட்டிங் வந்தோம் ஐயா” என கூறி உள்ளார் உடனே படக்குழுவில் இருக்கும் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர் அரை மணி நேரத்திற்கு பிறகு தான் மீண்டும் அந்த காட்சியை சிறப்பாக எடுக்கப்பட்டதாம்..