ஒரு நாள் கூத்துக்கு கொட்டிய காசு மொத்தமும் போச்சு என புலம்பித்தல்லும் நம்பர் நடிகை.!

actress
actress

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அந்த நடிகை சமீபத்தில் இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது சில கனவுகளை போட்டு வைத்திருந்த நம்பர் நடிகை அவருடைய கணக்கு தவறானதால் புலம்பி வருகிறாராம்.

தமிழில் 90களில் இருந்து நம்பர் ஒன் நடிகைகளாக வளம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ரஜினி, விஜய், அஜித்  என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதே சமயம் நடிகைக்கு முக்கியத்துவமான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் அந்த நம்பர் நடிகை தனது படத்தின் இயக்குனரை ஏழு வருடங்களாக காதலித்து சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணத்திற்குசினிமாவில் உள்ள முக்கிய புள்ளிகளும் கலந்து கொண்டனர். பிரமாண்டமாய் நடைபெற்ற இந்த திரைப்படத்தின் புகைப்படம் ஒன்று கூட லீக்காகவில்லை.

இதனால் திருமணம் எப்படி நடந்தது என்று தெரியாமல் ரசிகர்கள் தவித்து வந்தனர். புகைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததற்கு இந்த திருமணத்தின் நிகழ்ச்சியை பிரபல ஓடிடியில் ஒளிபரப்ப போகிறார்கள் என்றும். இதற்காக பெரிய தொகை பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

அதே சமயம் இந்து திருமணத்தின் நிகழ்ச்சி பிரபல இயக்குனர் ஒருவர் இயக்கியுள்ளார் என்றும் கூறப்பட்டது. ஆனால் திருமணத்தின் புகைப்படங்களை  அந்த நம்பர் ஒன் நடிகையும் இயக்குனரும் தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டிருந்தனர். இதைப் பார்த்த ரசிகர்கள் சந்தோசத்தில் துள்ளி குதித்து இருந்தனர். இதே சமயத்தில் மிகப்பெரிய ஓடிடித்தளத்தில் வெளியாகும் என கூறப்பட்டது ஆனால் இந்த புகைப்படங்களை நீங்கள் வெளியிட காரணம் என்ன என்று கேள்விகள் எழுப்பப்பட்டது.

அந்த திருமணத்தின் நிகழ்வை பிரபல ஓடிடியில் விற்க பெரிய தொகைக்கு பேசியிருந்தவர்கள். ஆனால் அந்த நிறுவனம் நீங்க சொன்ன தொகை எல்லாம் எங்களால் கொடுக்க முடியாது என கூறிவிட்டனர். இதனால் ரொம்பவும் அதிருப்தி அடைந்து அதன் பிறகு தான் நாங்கள் எங்களுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளோம் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.