இந்திய அணியின் அடுத்த தடுப்பு சுவரா இவரா வாய்பிளக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்.!! புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன.!

samith
samith

இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்றாலே நம் நினைவிற்கு வருபவர் ராகுல் டிராவிட். 1996 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஆட்டத்தை தொடர்ந்தவர் ராகுல் டிராவிட். டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தவர் ராகுல் டிராவிட் இவரது விக்கெட்டை வீழ்த்துவது சிரமம் என பல பந்துவீச்சாளர்கள் கூறியுள்ளனர். பந்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் எப்படி தடுத்து ஆட வேண்டும் என்பதை நன்றி புரிந்து உள்ளார் என்று பந்துவீச்சாளர்கள் பல ஊடகங்கள் முன்பு தெரிவித்துள்ளனர் என்பது நாம் அறிந்ததே.

இவரை இந்திய அணியினர் இவருக்கு பல புனை பெயர்களை வைத்தே கூப்பிடுவார்கள் அதிலும் குறிப்பாக தடுப்புச்சுவர் மற்றும் திரு.நம்பிக்கையாளர் என்று இவருக்கு பல பெயரை வைத்துள்ளனர் ஏனென்றால் கிரிக்கெட்டில் விக்கெட் விழும்போது அதை எப்படித் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் ராகுல் டிராவிட் என எனக் கூறுவார்கள் அதனாலேயே இவருக்கு இத்தகைய சிறப்பு பெயர்கள் உண்டு என பலர் தெரிவிக்கின்றனர்.

டிராவிட் அவர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை தாண்டி வீரர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளவர் ராகுல் டிராவிட். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டிராவிட் அவர்கள். இந்திய அணியின் அண்டர் 19 பயிற்சியாளராக பணியாற்றினார்.

இதில் பல திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்தவர் ராகுல் டிராவிட். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அகர்வால், சுமன் கில், பிரித்திவி ஷா போன்ற பல வீரர்களை இந்திய அணிக்கு உருவாகி கொடுத்தவர்.தற்பொழுது அவர்  இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைவராக பணியாற்றி வருகிறார்.

dravid
dravid

டிராவிட்டை போன்று அவரது மகனும் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். 14 வயதிற்கு உட்பட்ட அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார். டிசம்பர் மாதத்தில் 14 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார் மற்றும் அடுத்த இன்னிங்சில் 94 ரன்கள் எடுத்து அசத்தினார் இதனைத் தொடர்ந்து அவர் பள்ளி சார்பில் தனது கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

பள்ளி சார்பில் கிரிக்கெட் விளையாடி வரும் சமித் அவர்கள் 211 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இதில் அவர் 27 பவுண்டரிகள் அதுமட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனைக்கண்ட டிராவிட் ரசிகர்கள் இந்திய அணிக்கு அடுத்த தடுப்புச்சுவர் வந்துவிட்டார் என சமூகவளைதலத்தில் தெரிவித்து வருகின்றனர் அதுமட்டுமில்லாமல் கொண்டாடி வருகின்றனர்.