vijay antony : சினிமா உலகில் சாதித்த நடிகர், நடிகைள் அவர்கள் இருக்கும்போதும் சரி மறைந்த பிறகும் அவரைப் பற்றிய பேச்சைக் இருந்து கொண்டே இருக்கும் அப்படி எம்ஜிஆர் திரை உலகில் நடிக்கும் போது பல உதவிகளை செய்தார் முதலமைச்சர் ஆன பிறகும் பல உதவிகளை செய்து மறைந்தார் ஆனால் இன்று வரையிலும் அவரது பேச்சு இருக்கிறது.
அவரை தொடர்ந்து மக்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை செய்தும் திரை உலகில் கஷ்டப்பட்டவர்களுக்கு பல உதவிகளையும், உணவுகளையும் அளித்து புகழ் பெற்றவர் விஜயகாந்த் தற்போது அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அவருடைய பேச்சுக்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.
இவரை போன்று திரை உலகில் இன்னொரு விஜயகாந்த் வருவாரா என பலரும் எதிர்நோக்கிய காலங்கள் உண்டு. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் டி. சிவா அடுத்த விஜய்காந்த் இவர் தான் என ஒரு நடிகரை கைகாட்டி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. தயாரிப்பாளர் டி. சிவா கை காட்டுவது வேறு எந்த நடிகரையும் அல்ல விஜய் ஆண்டனியை தான்.. தயாரிப்பாளர் சிவா விஜய் ஆண்டனி வைத்து அக்னி சிறகுகள் என்னும் படத்தை எடுத்துள்ளார்.
படத்தின் ஷூட்டிங்கில் விஜய் ஆண்டனி நடந்து கொண்ட விதத்தை பெருமையாக பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால் விஜய் ஆண்டனியின் படம் துவங்குவதற்கு முன்பாகவே எனக்கு கேரவன் வேண்டாம்.. என கூறிவிட்டாராம் மேலும் அவர் வீட்டிலிருந்தே சுண்டல் மற்றும் சில உணவுகளை எடுத்து வந்து விடுவாராம்.
ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டுதான் இருப்பாராம் அக்னி சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனி நடித்த அருண் விஜய் நடித்தாராம் முதலில் அருண் விஜயின் காட்சிகளை எடுங்கள் ஏனென்றால் அவர் இந்த படத்திற்காக பயங்கரமாக உழைக்கிறார் என கூறிய அவருடைய காட்சிகளை முதலில் எடுக்க சொல்லிவிட்டு பிறகு இவர் தன்னுடைய காட்சியில் நடித்துவிட்டு போவாராம் அதுவும் அவ்வளவு சீக்கிரத்தில் வீட்டிற்கு போக மாட்டாராம்..
ஷூட்டிங் முடியும் வரை அங்கு இருப்பவர்களை அனுப்பிவிட்டு பிறகு தான் இவர் கடைசியாக செல்வார் என கூறினார் மேலும் விஜயகாந்த் போல தன்னால் முடிந்த பல நலத்தட்ட உதவிகளையும் விஜய் ஆண்டனி செய்து வருகிறார் எனவே இவர் தான் அடுத்த விஜயகாந்து என கூறியுள்ளார் இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது.