பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் நடந்த அடுத்த சோகம் – மூர்த்தியை தொடர்ந்து மருத்துவமனையில் அட்மிட்டான நபர்.!

pandian-store

சின்னத்திரையில் குடும்ப ஒற்றுமையுடன் படும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த தொடரில் 4 அண்ணன் தம்பி அவர்களை திருமணம் செய்து கொண்டு வரும் மருமகள்கள் என அனைவரும் ஒற்றுமையுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

சமீபத்தில் சில சச்சரவின் காரணமாக உறவினர்களின் பேச்சால் காயப்பட்டு கதிர் மற்றும் முல்லை இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இருவரும் வெளியேறியதை எடுத்து உடனடியாக மூர்த்தி இதய அடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனால் குடும்பமே ஆழ்ந்த சோகத்தில் உள்ள நிலையில் மீனாவின் அப்பா பணம் கட்டி ஆப்ரேஷன் செய்து தற்போது மூர்த்தி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் இரண்டாவது மருமகளாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா இந்த சீரியலில் சில சமயம் வில்லியாகவும் காமெடி பீஸ் ஆகவும் காணப்படுவார். இப்படி இருக்கின்ற நிலையில் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மீனா சமீபத்தில் சில அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.

meena
meena

ஹேமாவிற்கு மார்பகத்தில் நான்கு சென்டிமீட்டர் அளவில் ஒரு கட்டி ஏற்பட்டிருந்தது அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளார் இது மார்பக புற்று நோய்க்கான அறிகுறியாம். நான் உடனே மருத்துவரை சந்தித்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இந்த கட்டியை ஆரம்பத்திலேயே சரி செய்துள்ளேன் இல்லையென்றால் நாளடைவில்..

இது பெரிய கட்டியாகி பிரச்சனை ஏற்பட்டிருக்கும் என அவர் சமூக வலைதள பக்கங்களில் வீடியோவை வெளியிட்டுள்ளார் மேலும் பேசிய அவர் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.