அடுத்த டார்கெட் 1000 கோடி லோகேஷ் போட்ட பக்கா பிளான்.! லியோ படத்தின் மீது எகிறும் எதிர்பார்ப்பு…

leo
leo

நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படம் தற்போது காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் காஷ்மீரில் மட்டுமே இந்த திரைப்படம் இரண்டு மாதங்கள் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டே இருந்தது.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அப்டேட்டை படக்குழு வெளியிட்டிருந்தது இதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்திற்கான டைட்டில் பிரமோ வெளியானது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்திற்கான லியோ என்ற ரைட்டிலை வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த லியோ என்ற பெயரின் அர்த்தம் சிங்கம் என்று குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் இப்படி தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறி கொண்டே வருகிறது இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது அந்த வகையில் தமிழ் சினிமாவில் 500 கோடி வசூலித்த படங்களில் டாப் லிஸ்டில் இருக்கிறது விக்ரம் திரைப்படம். ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு தமிழ் திரைப்படமும் ஆயிரம் கோடி எட்டியுள்ளது என்றால் அது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் தற்போது உருவாகி வரும் லியோ திரைப்படம் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு இயக்குனர் லோகேஷ் கதையை செதுக்கி உள்ளாராம். அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படமும் விக்ரம் கைதி திரைப்படத்தைப் போல எல்சியு-வில் இணைய உள்ளது என்று கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் இந்த படமும் போதை பொருளை மையமாக வைத்து தான் உருவாக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

விக்ரம் படத்தில் நடித்த ஒரு சில கதாபாத்திரம் லியோ படத்திலும் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் ஆயிரம் கோடியை எளிமையாக எட்டி விடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் லியோ படத்தின் ஃப்ரீ ரிலீஸ் மட்டுமே 250 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.