சில்லா சில்லா பாடல் சும்மா டிரெய்லர் தாம்மா இனிமேல்தான் மெயின் பிக்சரே இருக்கு.! ரகசியத்தை உடைத்த பிரபலம்…

chilla-chilla
chilla-chilla

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து  எச் வினோத், அஜித், போனி கபூர் இணையும் மூன்றாவது திரைப்படமான துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக போனி கபூர் அவர்கள் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிப்ரான் அவர்கள் இசையமைத்துள்ளார் இதனை தொடர்ந்து இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது மேலும் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சில்லா சில்லா என தொடங்கும் பாடலை பட குழு நேற்று வெளியிட்டிருந்தது. ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தப் பாடலை வைசாக் அவர்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு திரைப்படத்தில் மூன்று பாடல்களை வயசாக் எழுதி உள்ளதாக ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள சில்லா சில்லா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சில்லா சில்லா பாடலை விட அடுத்த பாடல் இன்னும் மரண மாஸ் ஆக இருக்கும் என தற்போது சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

துணிவு திரைப்படத்தில் சில்லா சில்லா பாடலுக்கு கொரியோகிராப் செய்த கல்யாண் மாஸ்டர் அந்த ரகசியத்தை கூறியுள்ளார் அதாவது சில்லா சில்லா பாடலை விட அடுத்த பாடல் மரண குத்து இருக்கும் என்று கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றால் முதலில் சந்தோஷப்படுவது நான் தான் என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து துணிவு திரைப்படத்தில் அமைந்துள்ள இன்னொரு பாடலை கல்யாண் மாஸ்டர் தான் கொரியாகிராப் செய்கிறார் என்று தெரிகிறது. விரைவில் அந்த பாடலையும் பட குழு வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. சில்லா சில்லா பாடலின் இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு மேலும் ஒரு தகவலை கல்யாண் மாஸ்டர் கூறியுள்ளார் இதனால் உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளார்கள் எனக் கூறப்படுகிறது.