அடுத்த சிவகார்த்திகேயன் இவர் தான் மறைமுகமாக சொல்லும் நடிகர் சூரி.?

soori
soori

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பயணித்த பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து அசத்துகின்றனர் அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 இல் வெற்றியாளராக பயணித்த  முகேன்.

மலேசியாவில் வாழ்ந்து வரும் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இவர் ஆல்பம் பாடல்களை இசையமைத்து எழுதி பாடி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடி கொண்டிருந்த இவர் உலக நாயகன் கமலஹாசன் துவங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கு பெற்று தனது சிறப்பான பயணத்தை மேற்கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்து.

டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை அள்ளியதோடு மட்டுமல்லாமல் வெளியே வந்த அவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைத்தது. இப்போ முகேன் ராவ் கிராமத்துக் கதையில் உருவாகி வரும் வேலவன்  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து காமெடி நடிகர் சூரி, பிரபு போன்ற பலர் நடித்து அசத்தி உள்ளனர்.  இப்படம் விரைவில் வெளிவர ரெடியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சூரி இந்தப் படத்தில் நடித்த முகேன்னுடன் நடித்தது குறித்து பேசி உள்ளார் அவர் சொல்ல வருவது

நடிகர் சிவகார்த்திகேயனுடன் படத்தில் நடிக்கும் போது ஏற்படும் சந்தோஷம், ஜாலி அவை அனைத்தும் முகேன்னுடன் உணர்ந்தேன். சிவகார்த்திகேயன் போலவே சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய நடிகர் முகேன் இருந்தால் அந்த செட்டில் செம ஜாலியாக இருக்கும் என்பதை மறைமுகமாகவே சூரி சொல்லியுள்ளார்.