சமந்தாவுக்கு டாடா காட்டிய பின் நாகசைதன்யா எடுத்த அடுத்த புதிய முடிவு.? ஷாக்கான ரசிகர்கள்.

samanatha-and-naga-saithanya
samanatha-and-naga-saithanya

சினிமா உலகில் நடிக்கின்ற நடிகர் நடிகைகள் ஏதோ ஒரு வகையில் காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொள்கின்றனர். அப்படி அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ்கின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் எளிமையாக இருந்தாலும் நாட்கள் போக போக சிறு சிறு மனஸ்தாபங்கள் எல்லாம் மறந்து வாழ்க்கையை ஓட்டினால் மட்டுமே நீண்ட தூரம் பயணிக்க முடியும்.

ஆனால் அதை சினிமா பிரபலங்கள் செய்ய மறந்து விடுகின்றனர். இதனால் ஒரு கட்டத்தில் சின்ன விஷயங்கள் கூட பெரிதாக வெடித்து  ஒருகட்டத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர் அந்த வகையில் நடிகை சமந்தா, நாக சைதன்யா இருவரும் படங்களில் நடிக்கும்போது காதல் வயப்பட்டு பின் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

நான்கு வருடங்கள் அழகாக வாழ்ந்து வந்த இவர்கள் ரசிகர்கள் மத்தியில் சிறந்த ஜோடிகளாக உலா வந்தனர். சில படங்களில் சற்று சர்ச்சையான காட்சிகளில் சமந்தா நடித்தார். அது மிகப்பெரிய ஒரு விஷயமாக மாற பின் ஒரு கட்டத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதனை தொடர்ந்து நடிகை சமந்தா படங்களிலும் சரி, போட்டோசூட்டிலும் சரி ஆடையின் அளவை குறைத்து தாறுமாறாக இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்கள் மத்தியில் மேலும் தன்னை பிரபலப்படுத்தி கொண்டு வலம் வருகிறார். நடிகை சமந்தா இப்பொழுது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இப்படி இவர் இருக்க நாக சைதன்யாவோ மறுபக்கம் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது அவரது குடும்பத்தினர்கள் அடுத்ததொரு ஒரு பெண்ணைப் பார்க்க தேட ஆரம்பித்துள்ளனர் நிச்சயம் அந்தப் பெண் சினிமாவில் பிரபலமாக இருக்காது என்பது மட்டும் உறுதியாக இருக்கிறதாம் காரணம் ஏற்கனவே பட்டதெல்லாம் போதும் இனி சினிமா பக்கம் இல்லாத பெண்ணையே தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.