அடுத்த தேசிய விருது தனுஷ்க்கு தான்.! அடிச்சு சொன்ன முக்கிய பிரபலம்.. எகிரும் எதிர்பார்ப்பு…

dhanush
dhanush

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகர் தனுஷ். இவர் தனது அண்ணன் செல்வராகவன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இருந்தாலும் ஆரம்பத்தில் பல விமர்சனங்களை தாண்டி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

தனுஷ் அவர்கள் தற்போது கேப்டன் மிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவரது நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாத்தி திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது அதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

வாத்தி திரைப்படம் வெளியே வருவதற்கும் முன்பாகவே நடிகர் தனுஷ் அவர்கள் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், டேனியல் பாலாஜி, நாசர், உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த படப்பிடிப்பு தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவும் சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. மேலும் கேப்டன் மிலர் திரைப்படம் 1930-40 காலகட்டத்தில் பின்னணியை கொண்டு ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று திரைப்படம் என்ற ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்பட்டு இருக்கும் நிலையில் தற்போது ஒரு பிரபலம் சொன்னதுதான் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கி இருக்கிறது.

அதாவது இந்த சூழலில் தனுஷ் நிச்சயம் கேப்டன் மில்லர் திரைபடத்திக்காக நேஷனல் அவார்ட் வாங்குவார் என்று பிரபல விமர்சகர் சித்ரா லட்சுமணன் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். இதனால் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இரட்டிப்பாகி இருக்கிறது. விரைவில் கேப்டன் மிலர் திரைப்படம் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.