அடுத்த படம் கண்டிப்பா தேசிய விருது வாங்கனும்..! பிரபல இயக்குனரை பாடாய்படுத்தும் நடிகர் சிம்பு..!

simbu-1
simbu-1

தமிழ் சினிமாவில் வெகுநாட்களாக வெற்றியை துளிகூட சந்திக்காமல் இருந்து வந்த நடிகர் தான் சிம்பு இவர் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்த மாநாடு திரைப்படத்தின் மூலம் வெற்றியை சந்தித்துள்ளார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்புவுக்கு படவாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சிம்பு கஷ்டத்தில் இருக்கும்போது அவரை தரக்குறைவாக பேசிய பல்வேறு தயாரிப்பாளர்களும் தற்போது அவரிடம் வழிந்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவென்றால் சிம்பு சமீபத்தில் மாநாடு திரைப்படம் தான் இந்த மாநாடு திரைப்படத்தின் மூலமாக தியேட்டர் உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள்  மற்றும் ரசிகர்கள் என அனைவரும் சந்தோஷமாக உள்ளார்கள்.

அந்த வகையில் தற்போது பாலிவுட் சினிமாவில் மாநாடு திரைப்படத்தை பார்க்க வேண்டும் என பல்வேறு நட்சத்திரங்கள் மிக ஆர்வமாக இருக்கிறார்கள் அந்தவகையில் இந்த திரைப்படத்தை ஒரு ஷோ போட்டுள்ளது தமிழ் சினிமாவுக்கு பெரிய பெருமையை தேடித் தந்துள்ளது.

இந்நிலையில் தற்போது சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து மூன்று தேசிய விருதுகளை வாங்கி உள்ள இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் சிம்பு நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பொதுவாக சிம்பு மாசான திரைப் படங்களில் நடித்தாலே போதும் அவருக்கு பெரிய அளவு புகழும் பாராட்டும் உண்டாகும் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் ரசிகர்களுக்கு அதில் ஈர்ப்பு கிடையாத காரணத்தினால் தற்போது கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க சிம்பு முன்வந்துள்ளார்.

மேலும் இவ்வாறு உருவாகும் திரைப்படம் எப்பொழுது  ஆரம்பமாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது இயக்குனர் ராம் நிவின்பாலி வைத்து ஒரு திரைப்படம் எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தை முடித்த பிறகு சிம்பு திரைப்படத்தை உருவாக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.