மாஸ்டர் படத்தில் 50% என்னுடைய பங்கு.. அடுத்த படத்துல வேற மாதிரி இருக்கும் – தளபதி 67 குறித்து பேசிய லோகேஷ்.!

lokesh
lokesh

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி அசத்துகிறார் அந்த படங்களும் வெற்றியை ருசிக்கின்றன முதலில் மாநகரம் படத்தை இயக்கி அசத்தினார் அதனை தொடர்ந்து டாப் நடிகர்களை வைத்து மட்டுமே படங்களை எடுத்து வெற்றி கண்டு வருகிறார்.

நடிகர் கார்த்தியை வைத்து கைதி விஜய்யை வைத்து மாஸ்டர் இப்போ நடிப்பிற்கு பெயர்போன உலக நாயகன் கமலஹாசனை வைத்து “விக்ரம்” என்ற படத்தையும் உருவாக்கியுள்ளார் இந்த படமும் மிக பிரமாண்ட பொருட்செலவில் ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. விக்ரம் படம் வருகின்ற ஜூன் 3ம் ஆம் தேதி உலக அளவில் வெளியாகிறது.

இந்தப் படம் மட்டுமே உலக அளவில் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்பார்க்காத வசூலை அள்ளும் என கூறப்படுகிறது. விக்ரம் திரைப்படத்தை ரிலீஸ் செய்த உடனேயே லோகேஷ் அடுத்த படத்திற்கான வேலையைப் பார்ப்பார் என கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மீண்டும் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை எடுக்கவிருக்கிறார். அந்த படம் குறித்தும் சில சுவாரஸ்ய தகவல்களை அவரே பகிர்ந்துள்ளார் அதாவது மாஸ்டர் படத்தை இயக்கும்போது லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி போன்ற படங்களில் வெளியாகியிருந்தன.

அதனால் விஜய்யின் மாஸ்டர் படத்தில் 100% லோகேஷ் கனகராஜால் அந்த படத்தை எடுக்க முடியாமல் போனதாம் ஆனால் படம் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது.  இப்பொழுதே என்னை பற்றி விஜய் சாருக்கு நன்றாகவே தெரியும் அவரைப் பற்றி எனக்கும் நன்றாகவே தெரியும் அதனால் அடுத்த படத்தில் 100% உழைத்து அந்தப் படத்தை ரசிகர்களுக்கு வேற மாதிரி கொடுப்பேன் என கூறி உள்ளார்.

நீங்கள் மாஸ்டர் படத்தில் பார்த்தது பெரும்  50% ஆனால் தளபதி 67 வேற மாதிரி இருக்கும் படம் முழுக்க முழுக்க தன்னுடைய படமாக இருக்கும். விஜய் ரசிகர்கள் எப்படி எதிர்பார்கிறாரோ அதேபோல கொடுப்பேன் எனவும் கூறியுள்ளார். இந்த படத்தை வெறும் 6 மாதத்தில் எடுத்து முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.