The next film to be directed by Lokesh Kanagaraj after the master film : தளபதி விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனராக கலக்கிக்கொண்டு வருபவர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கிய மாநகரம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் அதன் பிறகு கைதி திரைப்படத்தை இயக்கி ஒரு படி மேலே போய் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை ரசிகர்களின் மனதில் பதிய வைத்தார்.
இந்த நிலையில் தற்பொழுது விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா, கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ் ஆகியோர்கள நடித்துள்ளார்கள். ஊரடங்கு முடிந்தவுடன் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக யார் திரைப்படத்தை இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் இருந்து வருகிறது, அந்த வகையில் தற்பொழுது யார் படத்தை இயக்க இருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் அடுத்த படத்திற்கான கதையை உருவாக்கிக் கொண்டிருக்கிறாராம், இவர் தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் கதையில் நடிகர் சூர்யா அல்லது கார்த்தி நடிப்பார்கள் என தெரியவந்துள்ளது, இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.