அடுத்த 4 மாசம் இந்த இயக்குனரிடம் தான்..! விட்டதை பிடிக்க வெறிகொண்டு காத்துகிடக்கும் தனுஷ்..!

dhanush
dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தனது ஒவ்வொரு படத்திற்கும் கடுமையாக உழைத்து வருகிறார்கள் இருப்பினும் ஒரு சில படங்கள் தோல்வியை சந்திக்கின்றன அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாறன், ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் பெரிய அளவு வெற்றியை ருசிக்கவில்லை.

தனுஷ் அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து பல்வேறு புதிய படங்களில் நடித்துள்ளார் தனுஷ் கையில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேன், மித்திரன் ஜவகர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி ஆகிய படங்கள் இருக்கின்றன இந்த ஒவ்வொரு திரைப்படமும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

அண்மையில் திருச்சிற்றம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றி மாறனும் கலந்து கொண்டார் அப்பொழுது வடசென்னை படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் எடுக்கப்படும் என சொல்லி அதிர வைத்தார் இது இப்படி இருக்க இந்த மூன்று படங்களை தாண்டி அடுத்ததாக நடிகர் தனுஷ் ராங்கி, சாணி காயிதம் ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கின்ற திரைப்படம் “கேப்டன் மில்லர்”.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது இந்த படத்தில் ஒரு ரேசராக தனுஷ் நடிகை இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இந்த நிலையில் கேப்டன் மில்லர் படம் குறித்த ஒரு சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இந்தப் படம் 30 களில் உருவான ஒரு கதை போல எடுக்கவே இருக்கின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் ஷூட்டிங்கை நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது மேலும் இந்த மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை ஷூட்டிங் நடைப் பெற உள்ளது.
தனுஷ் வேறு எந்த படத்திலும் கமீட்டாகாமல் நான்கு மாதங்கள் கேப்டன் மில்லர் படத்தில் விறுவிறுப்பாக நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது.