தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயினாக வளம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் ஒரு வழியாக திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் ஜூன் மூன்றாம் தேதி மகாபலிபுரத்தில் நடந்தது.
இவர்கள் திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான் மற்றும் பல பரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விக்கி நயன்தாரா கல்யாணத்துக்கு வந்தவர்களுக்கு தங்கம் வெள்ளி போன்ற பரிசு பொருட்களை கொடுத்து இந்த ஜோடி அழகு பார்த்தது மேலும் திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்ற முதியவர் குழந்தைகள் என ஒரு லட்சம் பேருக்கு உணவு கொடுத்தது இந்த ஜோடி.
திருமணம் முடிந்த கையோடு திருப்பதி, கேரளா மற்றும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்ற அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் தீயாய் பரவின. தற்பொழுது நடிகை நயன்தாரா அடுத்தடுத்த பல்வேறு படங்களில் கமிட்டாகி உள்ளதால் அதில் நடிக்க தொடங்கியுள்ளார் அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான்.
படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார் இதற்காக அவர் மும்பை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது நயன்தாராவை விடாமல் வீக்கியும் அவர் கூடவே சுற்றி திரிந்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் சமூக வலைதள பக்கத்தில் விக்கி நயன்தாரா கல்யாண புகைப்படங்களை..
தற்போது வெளியிட்டு வந்த நிலையில் பாலிவுட் பிரபல நடிகையான மாளவிகா அரோரா என்பவருடன் விக்கி நயன்தாரா இருவரும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் மேலும் மாளவிகா அரோரா விக்கி நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார் மேலும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளாராம்.