லியோ ட்ரெய்லர் வெளியீடு.. ரோகிணி தியேட்டருக்கு அட்வைஸ் கூறிய போலீஸார்கள்!

leo movie
leo movie

Leo Movie: நடிகர் விஜய்யின் லியோ பட ட்ரெய்லர் வெளியிடுவது தொடர்பாக கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு போலீஸ் அட்வைஸ் கொடுத்திருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

எனவே ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இந்த சூழலில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படக் குழு இசை வெளியீட்டு விழா நடைபெறாது என தெரிவித்தனர். இதனை அடுத்து சில தினங்களுக்கு முன்பு லியோ படக் குழு லியோ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என அறிவித்திருந்தார்கள்.

இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்து வந்த நிலையில் ஆனால் தற்பொழுது அதற்கும் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. அதாவது ஏற்கனவே நேர் விளையாட்டு அரங்கி லியோ இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில் ட்ரெய்லர் வெளியீட்டுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

லியோ ட்ரெய்லர் வெளியிடுவதற்கான புதிய நடைமுறை காரணமாக சினிமா வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுவாக விஜய்யின் பல்வேறு படங்களின் ட்ரெய்லர் வெளியாகும் பொழுதும் ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம் அதேபோல் ஒரு சில அசம்பாவிதமும் நடைபெற்று இருக்கிறது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் போன்ற தொந்தரவுகளும் அந்த பகுதியில் ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் காவல்துறை அறிவுரைகளை ரோகிணி தியேட்டருக்கு வழங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நரிக்குறவர் இன பெண்களை அனுமதிக்காதது மேலும் 10 ரூபாய் நாணயங்களை பெறாதது போன்ற பல்வேறு பிரச்சினைகளில் ரோகிணி நிறுவனம் சிக்கி இருக்கும் நிலையில் தற்பொழுது காவல்துறை அறிவுரைகளை ரோகிணி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது