ரசிகர்களால் உருவாக்கப்பட்ட வாரிசு படத்தின் புதிய போஸ்டர்..! சமூக வலைதளங்களில் வைரல்.

vijay-
vijay-

தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவறும்படியான பல ஹிட் படங்களை கொடுத்து வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விஜய்க்கு 66 வது திரைப்படம். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகின்ற நிலையில் தில் ராஜு தயாரித்து வருகிறார்.

வாரிசு படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளதாம். இந்த படம் காமெடி, கமர்சியல், ஆக்சன் போன்ற அனைத்தும் நிறைந்த ஒரு கலவையான படமாக உருவாகி வருவதாக படத்தில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் பட குழுவில் இருந்தும் தகவல்கள் கசிந்துள்ளன. வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

இவரைத் தொடர்ந்து குஷ்பூ, ஷாம், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஜெயசுதா, சரத்குமார் போன்ற நடிகர் நடிகைகள் நடித்த வருவதாக கூறப்படுகின்றன. இந்த படம் ஹைதராபாத் சென்னை ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த..

நிலையில் கடைசியாக விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் வாரிசு படப்பிடிப்பு நடந்து வருவதாக புகைப்படங்கள் கூட லீக் ஆகியது.  இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் கசிந்த வண்ணமே இருக்கின்றன. வாரிசு பட குழுவும்  எவ்வளவு கட்டுப்பாடுகளுடன் படத்தை எடுத்து வந்தாலும் எப்படி தான் லீக் ஆகிறது என்றே தெரியவில்லை.

இந்த நிலையில் வாரிசு படம் குறித்து புதிய போஸ்டர் ஒன்றை விஜய் ரசிகர்கள் உருவாக்கி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர் அந்த போஸ்டரில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இடம் பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர்.