ஒருவழியாக சூப்பர் ஹீரோவாக மாறிய தல தோனி – இணையதளத்தில் கலக்கும் கிராபிக் நாவலின் புதிய புகைப்படம்.

dhoni
dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தல தோனி கிரிக்கெட்டை தவிர்த்து விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது நாவல் ஒன்றில் சூப்பர் ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார். இந்த நாவலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

கிராபிக் நாவலான அதர்வா தி ஆரிஜின் என்ற நாவலில் எம்எஸ் தோனி சூப்பர் ஹீரோவாக தோன்றியுள்ளார். இந்த நாவலை  ரமேஷ் தமிழ்மணி எழுதி உள்ளார். குறித்து தல எம்எஸ் தோனி  பேசியது : இந்த பிரமாண்டமான புதிய முயற்சியில் நானும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இது உண்மையிலேயே ஒரு அற்புதமான முயற்சியாகும் அதர்வா தி ஆரிஜின் ஒரு இயக்கும் கதையும் மற்றும் அதி அற்புதமான கலை தன்மையும் கொண்ட வசீகரிக்கும் கிராபிக் நாவல். எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் தொலைநோக்குப் பார்வையில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

சமகாலத்திய தொடர்புடன் இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் அவரது ஐடியாவை கேட்டவுடன் சம்மதித்து விட்டேன். என தல தோனி பேசினார் இந்த நாவலின் வெற்றியை ருசிக்கும் பட்சத்தில் இந்த நாவல் படமாக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தல தோனி ஏற்கனவே அவரது வாழ்க்கை வரலாற்று கதை வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது இந்த நாவலில் தோனியை ஒரு சூப்பர் ஹீரோவாக நடித்து உள்ளதால் இந்த நாவல் நிச்சயம் மிகப்பெரிய ஒரு இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

dhoni
dhoni