தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே பயணிக்க ஆசைப்படுவார்கள். ஏனென்றால் அப்பொழுதுதான் அவர்களது மார்க்கெட் குறையாமல் இருக்கும் என்ற எண்ணம். ஆனால் அதற்கு மாறாக ஒரு சில நடிகர்களோ சிறந்த கதைகளம் அமைந்தால் குணச்சித்திர கதாபாத்திரம் கெஸ்ட் ரோல் போன்ற சிலவற்றிலும் நடித்து வருகின்றனர்.
அதற்கு பெயர் போனவர் விஜய் சேதுபதி தான். அண்மைக்காலமாக விஜய் சேதுபதி தான் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் போன்ற அனைத்திலும் நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சூர்யாவும் ஹீரோவாக மட்டுமல்லாமல் கெஸ்ட் ரோலிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார். இவர் அந்த படத்தில் வந்து சென்றது ஐந்து நிமிட காட்சிகளாக இருந்தாலும் அந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து மாதவன் நடிப்பில் வெளிவந்த ராக்கெட்ரி திரைப்படத்திலும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த இரு படங்களை தொடர்ந்து தற்போது சூர்யாவிற்கு அதிக கெஸ்ட் ரோல் வாய்ப்பு வருகிறது.
அந்த வகையில் தமிழில் சூர்யா நடித்து தயாரித்த சூரரை போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் மட்டுமல்லாமல் தேசிய விருது பட்டியலிலும் இடம் பெற்றது. இந்த படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு எடுக்கப்பட்டு வருகின்றன. அதனை சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கும்.
இந்த படத்தில் சூர்யா ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளாராம். இதைத்தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து RC 15 திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்திலும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் எந்த அளவிற்கு பேசப்பட்டதோ அதைவிட சிறப்பாக இந்த கதாபாத்திரம் இருக்கும் என கூறப்படுகிறது.