விக்னேஷ் சிவனுக்கு கிடுக்கு பிடி போட்ட லைகா நிறுவனம்..! இனி நயன்தாராவுடன் ஊர் சுத்த முடியாது.?

ajith - viknesh sivan
ajith - viknesh sivan

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து பெயர் வைக்கப்படாத தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் ஹெச் வினோத் இயக்கி வருகிறார் மற்றும் தில்ராஜு தயாரித்து வருகின்றனர். இந்த படம் பேங்க் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரகனி, வீரா, அஜய், ஜான் கொக்கின் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன இந்த படத்தை முடித்துவிட்டு அஜித் அடுத்து தனது 62 ஆவது படத்தில் இணைவார் என தெரிய வருகிறது. AK 62 படத்தை நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைய உள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இதற்கு முன் ஒரு சில திரைப்படங்களே இயக்கியுள்ளவர் இவர் இயக்கத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை அதனால் அஜித் படத்தை இவர் எப்படி இயக்குவாரோ என்ற சந்தேகம் பலர் மத்தியிலும் இருக்கின்றன.

அதற்கு ஏற்றார் போல விக்னேஷ் சிவனும் இந்த படத்தின் கதையை தீவிர படுத்தாமல் நயன்தாராவை திருமணம் செய்து கொண்டு அவருடன் ஊர் சுற்றி வருகிறார் இதற்கிடையே அஜித்தின் ஏகே 62வது படத்தை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் விக்னேஷ் சிவன் இப்படி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கையில்..

இந்த படத்தை தயாரிக்க உள்ள லைக்கா நிறுவனமோ விக்னேஷ் சிவனிடம் சீக்கிரம் ஏ கே 62 படத்தின் கதையை முழுவதும் சொல்ல வேண்டும் என்ற நிபந்தனைக்கு வந்துள்ளது இதனால் விக்னேஷ் சிவன் கூறும் கதை லைக்கா நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை என்றால் விக்னேஷ் சிவனுக்கு பிரச்சனை தான் மற்றும் ஏகே 62 படத்திற்கும் இது சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.